» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மத்திய அரசின் பாராட்டுச் சான்று பெற்ற ஊர்காவல் படை பெண் தளபதிக்கு எஸ்பி வாழ்த்து!

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 4:25:27 PM (IST)



சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ள தூத்துக்குடி ஊர்க்காவல் படை பெண் படைத்தளபதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வாழ்த்து தெரிவித்தார். 

பொது இயக்குநரகம் - தீயணைப்பு சேவைகள், குடிமை பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை உள்துறை அமைச்சகம் புதுடெல்லி சார்பாக தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் 26 ஊர்க்காவல் படை வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையை பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வரும் படைத் தளபதி உலகம்மாள் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மேற்படி பாராட்டு சான்றிதழ் மற்றும் வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார்.

மேற்படி உள்துறை அமைச்சகம் புது டெல்லி மூலமாக பாராட்டு சான்றிதழ் மற்றும் வெண்கல பதக்கம் பெற்ற ஊர்க்காவல் படை படைத் தளபதி உலகம்மாள் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (29.04.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டி மென்மேலும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்தினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் மீரா உடனிருந்தார்.


மக்கள் கருத்து

தூத்துக்குடி மக்கள் சார்பாகமே 3, 2025 - 09:29:11 AM | Posted IP 104.2*****

வாழ்த்துக்கள்

naan thaanமே 1, 2025 - 05:54:18 PM | Posted IP 172.7*****

CONGRATS MADAM

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory