» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 4:38:45 PM (IST)



நெல்லையில் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்து, பார்வையிட்டார். 

திருநெல்வேலி மருத்துவ கல்லூரிக்கு அருகே அமைந்துள்ள M.O.C வளாகத்தில் இன்று (29.04.2025) ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், தொடங்கி வைத்து, பார்வையிட்டார்கள். 

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 229 நபர்கள் ஹஜ் புனித யாத்திரை செல்ல இருப்பதால் அவர்களுக்கான கியூ.எம்.எம்.வி.தடுப்பூசிகள் QMMV – Quadrivalent Meningococcal Meningitis Vaccine (QMMV) மற்றும் எஸ்.ஐ.வி தடுப்பூசிகள் (Seasonal Influenza Vaccine) இன்று திருநெல்வேலி மருத்துவ கல்லூரிக்கு அருகே அமைந்துள்ள M.O.C வளாகத்தில் வைத்து காலை 9 மணி முதல் நடைபெற்றது. இம்முகாமில் ஹஜ் புனித யாத்திரை செல்வோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து தடுப்பூசிகள் போட்டுக் கொண்டனர். 

தொடர்ந்து, நாளையும் 30.04.2025 ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. ஹஜ் புனித யாத்திரை செல்வோர் இம்முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், தெரிவித்துள்ளார்.இம்முகாமில், மாலினி, சைலா, ரமீஸ் ராஜா, விஜய் ஆனந்த், ஆஸ்பாஸ் உட்பட மருத்துவக் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory