» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

புதன் 30, ஏப்ரல் 2025 10:06:36 PM (IST)

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைவராக எஸ்பி வாரியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தில் தலைவர், செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேர்தல் அதிகாரிகளாக வழக்கறிஞர்கள் ஸ்டீபன் அந்தோணி ராஜ், பிள்ளை விநாயகம், ராஜசேகர் சுப்பையா ஆகியோர் செயல்பட்டனர். சங்கத்தில் உள்ள 780 உறுப்பினர்களில்  704பேர் வாக்களித்தனர். பின்னர் மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

இதில், வழக்கறிஞர் சங்கத் தலைவராக எஸ்பி வாரியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் துணைத் தலைவராக சிவசங்கர், செயலாளராக செல்வின், இணைச் செயலாளராக பாலகுமாரன், பொருளாளராக கணேசன், மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக அரிமுருகன், சார்லஸ், மணிகண்டன், முனீஸ்குமார், ராஜ்குமார், ரமேஷ் செல்வகுமார், விக்னேஷ், முருகன், பிரவீன்குமார், ஸ்ரீநாத் ஆனந்த், தமிழ்செல்வி, யூஜியானா, உஷா, ரெக்ஸ் அன்டோ ரோஷிடா ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

Dr.Y.J.A.Kalai Selvanமே 1, 2025 - 11:41:13 AM | Posted IP 104.2*****

congratulations

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory