» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா : கண்ணீர் மல்க கிராம மக்கள் பிரியாவிடை

வியாழன் 1, மே 2025 8:45:12 AM (IST)



விளாத்திகுளம் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள்பாராட்டு விழா நடத்தி கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள துவரந்தை கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 22 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த தில்லையம்மாள் என்பவர் பணி ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி அப்பள்ளியில் வைத்து மாபெரும் பணி நிறைவு பாராட்டு விழா வைத்து அசத்தியுள்ளனர். 

அதுமட்டுமின்றி, கிராம மக்கள் தங்களது கிராமத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த பெண் தலைமை ஆசிரியருக்கு மோதிரம் அணிவித்து, ஆரத்தழுவி பொன்னாடை போர்த்தி கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்துள்ளனர். 

விழாவில் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள், பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தில்லையம்மாளுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி அவரது நற்குணங்கள் பற்றி பேசி பாராட்டி மகிழ்ந்து தங்களது அன்பை பகிர்ந்து கொண்டனர். 

கிராம மக்களே திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்த இந்த பணி நிறைவு பாராட்டு விழாவில், பள்ளி மாணவ - மாணவிகள், முன்னாள் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சக ஆசிரியர்களின் வாழ்த்துப்பாடல்கள், கவிதைகள் என அனைத்தும் பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தில்லையம்மாளை ஆனந்தக் கண்ணீருடனே மேடையில் அமர வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் உட்பட அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என கலந்து கொண்ட அனைவரும் அறுசுவை அசைவ விருந்தில் பங்கேற்று உணவருந்திச் சென்றனர்.


மக்கள் கருத்து

NATIVE PEOPLESமே 3, 2025 - 09:30:50 AM | Posted IP 172.7*****

வாழ்க வளமுடன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory