» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழக வெற்றிக் கழகத்தினர் திடீர் சாலை மறியல் : தூத்துக்குடியில் பரபரப்பு!

வியாழன் 1, மே 2025 10:09:53 AM (IST)



தூத்துக்குடியில் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தலை இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதைக் கண்டித்து அக்கட்சியின் பொறுப்பாளர் அஜிதா ஆக்னஸ் தலைமையில் த.வெ.கவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியே வந்த மாநகராட்சி அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டனர். 

அப்போது அவர்கள் கூறுகையில், "காவல்துறை அனுமதியுடன் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டதாகவும், தவெக வளர்ச்சியை பொறுக்காமல் ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் நீர் மோர் பந்தலை அகற்றி விட்டதாகவும் குற்றம்சாட்டினர். இதையடுத்து மத்திய பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. 


மக்கள் கருத்து

ADA NAAN THAAN DAமே 1, 2025 - 05:15:11 PM | Posted IP 172.7*****

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு வாழ்த்துக்கள்...

Pitchishமே 1, 2025 - 03:55:23 PM | Posted IP 172.7*****

Loosu koothakku oru mollamasri

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory