» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடலுக்குள் 200 ஆண்டுகள் பழமையான சிலை மீட்பு!

வெள்ளி 2, மே 2025 10:31:05 AM (IST)



தருவைக்குளம் கடலுக்குள் சுமார் 200 ஆண்டுகள் பழமையான 150கிலோ எடை கொண்ட சிலையை மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் தருவைக்குளம் கிராமத்தில்  நேற்று காலை 11 மணி அளவில் கடலுக்குள் அமைக்கப்பட்ட மீன்பிடி தளத்தின் இரண்டாம் குறுக்கு பாதையில் கீழ் பகுதியில் 'அன்னை' விசைப்படகு ஊழியர்கள் உந்து விசை காத்தாடி பழுதுபார்த்தல் வகைக்கு கடலில் இறங்கி பணி செய்த வேளையில் தங்கள் காலில் வித்தியாசமான முறையில் தட்டுப்பட்டது என்னவென்று கூர்ந்து கவனித்த தில் அது ஓர் தெய்வ திருமேனி என்பதை அறிந்து கவனமாக திறம்பட செயல்பட்டு பழு தூக்கி உதவியுடன் சேதாரம் இன்றி கரை சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறுகையில், "தனக்கு தருவைக்குளம் வரலாற்று ஆர்வலர் செ.அ.லாரன்ஸ் வாயிலாக பகிரப்பட்ட தன் அடிப்படையில் ஆய்வு செய்ததில் இந்த தெய்வ திருமேனி 37 அங்குலம் உயரம், 24 அங்குலம் அகலம், 10 அங்குலம் கணம் கொண்டு சுமார் 150கிலோ எடை கொண்ட பெண் தெய்வம் திருமேனி.  இந்த அம்மனுக்கு நான்கு கரங்கள் உள்ளன. 

மேல் வலது கரத்தில் நாகத்தோடு சேர்ந்த உடுக்கையும், மேல் இடது கரத்தில் பாசக்கயிரும், கீழ் வலது கரத்தில் மேல் நோக்கி உள்ள திரிசூலமும், கீழ் இடது கரத்தில் குங்கும கும்பாவும், சிங்க வாகனத்தில் அமர்ந்துள்ள நிலையில் இரண்டு கால்களுக்கு இடையில் படமெடுக்கும் நாகம் அமையப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும், இது நமது பாண்டியர்களின் சிற்ப சாஸ்திரம் அடிப்படையில் வடிவமைப்பு செய்தது போன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக சுழல் அலை வேக பகுதியில் இந்த திருமேனி கிடந்துள்ளது என்பதால் சற்று புதியது போன்று உள்ளது. இதன் மேல் படிந்துள்ள சிப்பி படிமங்களை சுத்தம் செய்து இதன் வடிவமைப்பு முறைகள் குறித்து ஆய்வு செய்ய உண்மையான காலகட்டம் குறித்த தகவல்கள் வெளிவரும். தற்போதைய நிலையில் தோராயமாக 200 ஆண்டுகள் பழமையானது போன்று தெரிகின்றது. இதுகுறித்து தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் சகிதம் தகவல்கள் பரிமாறப்பட்டது என்றும் இன்னும் ஓரிரு நாட்களில் முறையாக அவர்கள் ஆவணம் செய்து ஆய்வு செய்வார்கள் என்றார்.


மக்கள் கருத்து

P. கண்ணன்மே 3, 2025 - 03:00:11 AM | Posted IP 104.2*****

அய்யா தெய்வ தொண்டர் பொன்மாணிக்கவேல் அய்யாவின் பார்வைக்கு செல்ல வேண்டும் அப்போதுதான் இது எந்த வழியா வந்தது என தெரியிம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory