» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வெம்பூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு: கண்களில் கருப்புத் துணி கட்டி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
வெள்ளி 2, மே 2025 3:24:56 PM (IST)

வெம்பூர் சிப்காட் பணியை அரசு நிறுத்த வலியுறுத்தி எட்டையபுரத்தில் விவசாயிகள் கண்களில் கருப்புத் துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, இராமசாமிபட்டி, பட்டித்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி சுமார் 2700 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தி ஈடுபட்டு வருகிறது.
இதனை கண்டித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் தமிழ்நாடு அரசு விவசாய நிலங்களை அழிக்கும் இத்திட்டத்தை கைவிடாமலும், விவசாயிகளை உணர்வுகளை மதிக்காமலும் விவசாய நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று எட்டையபுரம் பேருந்து நிலையம் முன்பு ஏராளமான விவசாயிகள் தங்களது கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு சிப்காட்-க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் தமிழக அரசைக் கண்டித்தும், சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் உடனடியாக சிப்காட் அமைப்பதற்கு அரசு மேற்கொள்ளும் பணியை நிறுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் அதிகளவிலான விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மயான வேட்டைக்கு சென்ற சாமியாடி திடீர் சாவு: நெல்லை அருகே பரபரப்பு!
ஞாயிறு 4, மே 2025 9:28:26 AM (IST)

தாழையூத்து மேம்பாலத்தில் வாகன விபத்து : பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாப சாவு
சனி 3, மே 2025 3:26:17 PM (IST)

செங்கோட்டை அருகே ரயிலில் கடத்திய ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: 2 பேர் கைது!!
சனி 3, மே 2025 8:52:03 AM (IST)

ஜவகர் சிறுவர் மன்றத்தில் மாணவர்களுக்கு கலைப் பயிற்சி முகாம் :ஆட்சியர் தகவல்
வெள்ளி 2, மே 2025 3:45:52 PM (IST)

பைக் மீது தனியார் பஸ் மோதி ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
புதன் 30, ஏப்ரல் 2025 9:34:52 PM (IST)

மானூர் அருகே நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகு : ஆட்சியர் தொடங்கி வைத்தார்
புதன் 30, ஏப்ரல் 2025 5:10:03 PM (IST)

KARTHIK KANNANமே 2, 2025 - 08:49:45 PM | Posted IP 172.7*****